உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமலையாறு நீர் தேக்கத்தில் மாயமானவர் உடல் இருநாள் பின் மீட்பு

சிறுமலையாறு நீர் தேக்கத்தில் மாயமானவர் உடல் இருநாள் பின் மீட்பு

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையாறு நீர்த்தேக்கத்தில் மாயமான டிரைவரின் உடலை நேற்று 2 வது நாளாக தேடிய தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டனர்.கொடைரோடு அருகே ராஜதானி கோட்டையில் உள்ளது சிறுமலையாறு நீர்த்தேக்கம். தொடர் மழையால் நிறைந்து மறுகால் பாய்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சுற்றுலா செல்வது போல் இங்கு வந்து குளித்து மகிழ்கின்றனர். அப்பகுதி ஜெகநாதபுரத்தை சேர்ந்த டிவைர் பிரகாஷ் 32, தனது இருமகன்களுடன் சிறுமலை ஆறு நீர்த்தேக்கத்திற்கு குளிக்க சென்றார். தனது மகன்கள், உறவினர்கள் தண்ணீரில் விளையாடி கொண்டு குளிப்பதை நீர்த்தேக்கத்தின் ஆழமான பகுதியான தண்ணீர் மறுகால் பாயும் இடத்தின் அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென மாயமானார்.தீயணைப்பு மீட்பு படையினர் நீர்த்தேக்கத்தின் ஆழமான பகுதிக்குள் பல மணி நேரம் தேடினர். இரவு நெருங்கியதால் மீட்பு பணியில் தடை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று 2 வது நாளாக நடந்த மீட்பு பணியில் பல மணி நேரத்திற்கு பின் பிரகாஷின் உடலை மீட்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு சிறுமலை ஆறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் போதுமான பாதுகாப்பை பொதுப்பணித்துறையினர் ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை