உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் சுட்டெரிக்கும் வெயில்

கொடைக்கானலில் சுட்டெரிக்கும் வெயில்

கொடைக்கானல்:கொடைக்கானலில் தொடர்மழை பெய்த நிலையில் சில தினங்களாக சுட்டெரிக்கும் வெயில் நீடித்து வருகிறது.காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்ட காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின. இங்குள்ள முக்கிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. வழக்கமாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படும் கொடைக்கானலில் மழையால் பனியின் தாக்கம் தணிந்து இருந்தது. இரு தினங்களாக சுட்டெரிக்கும் வெயில் கொடைக்கானலில் நீடிக்கும் நிலையில் இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. மாலையில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !