/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தமிழகத்தில் மனித உரிமை மீறல் அதிகரிக்கிறது த.வா.க.,தலைவர் வேல்முருகன் பேட்டி
தமிழகத்தில் மனித உரிமை மீறல் அதிகரிக்கிறது த.வா.க.,தலைவர் வேல்முருகன் பேட்டி
திண்டுக்கல் : ''தமிழகத்தில் நாளுக்கு நாள் மனித உரிமை மீறல் அதிகரிக்கிறது''என,த.வா.க.,தலைவர் வேல்முருகன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: சாம்சங் தொழிலாளர்கள் தொழிலாளர் ஆணையத்தில் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய மறுப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என கூறுகிறது. அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழக அரசும், அமைச்சர்களும் செயல்படுவது ஏற்புடையதல்ல.தமிழகத்தில் நாளுக்கு நாள் மனித உரிமை மீறல் அதிகரிக்கிறது. நிதி நிலையை சீர்படுத்தி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றார்.