உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அச்சுறுத்தும் கொடை மேல்மலை ரோடுகள்: பயணிகள் அவதி

 அச்சுறுத்தும் கொடை மேல்மலை ரோடுகள்: பயணிகள் அவதி

கொடைக்கானல்: - கொடைக்கானல் பூம்பாறை ரோடு சேதமடைந்துள்ளதால் பயணிகள் அவதியடைகின்றனர். கொடைக்கானல் மேல்மலை பகுதியான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கவுஞ்சி கிளாவரை உள்ளிட்ட ஏராளமான உட்கடை கிராமங்களின் முக்கிய ரோடாக உள்ளது. அப்சர்வேட்டரி துவங்கி மன்னவனுார் வரை ராட்சத பள்ளம், பல்லாங்குழி என படுமோசமாக உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் விளைபொருள்களை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலை,வாகனங்கள் பழுதாவது என நாள்தோறும் அவதிக்குள்ளாகின்றனர். மேல்மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகளும் முகம் சுளிக்கின்றனர். குறுகிய ரோட்டில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத சூழல், பக்கவாட்டு பகுதி அரிப்பு என ரோட்டின் நிலை பரிதாபமாக உள்ளது. மழைநீர்,ஊற்று தண்ணீர் வடிந்தோட வழியில்லாத சூழல், சேதமடைந்த பேவர் பிளாக் கற்கள் என விபத்து அபாயத்தில் சென்று வரும் நிலை உள்ளது. சேதமடைந்த ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை