உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருக்குறள் சக்தி வாய்ந்த நுால் திருமாவளவன் பேச்சு

திருக்குறள் சக்தி வாய்ந்த நுால் திருமாவளவன் பேச்சு

திண்டுக்கல் : ''திருக்குறள் பைபிள், குரானை விட சக்தி வாய்ந்த நுாலாகும்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.திண்டுக்கல் யானை தெப்பம் அருகே உள்ள மண்டபத்தில் நடந்த திருக்குறள் பேரவையம் தொடக்க மாநாட்டில் அவர் பேசியதாவது: திருக்குறள் நுாலானது பைபிள்,குரானை விடவும் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட சக்தி வாய்ந்த நுாலாகும். மத பேதமின்றி அனைவரும் திருக்குறளை மொழி பெயர்த்து படித்தனர். மானுடம் தழைக்க திருக்குறளில் அறவழிகள் நிறைந்தது. இப்படி சிறப்பு வாய்ந்த வள்ளு வருக்கு மதச்சாயம் பூச பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல. குழந்தை ராமர் சிலையின் தலைக்கு மேலுள்ள கதிர்களில் 10வதாக மகாவிஷ்ணு அவதாரம் என்று குறிப்பிடபட்டுள்ளது. அந்த மகாவிஷ்ணு அவதாரம்தான் புத்தர் என தவறான கருத்துக்களை மேலும் சிலர் திணிக்க பார்க்கின்றனர். இவர்கள் சொல்வதை எல்லாம் நம்பினால் தமிழர்கள் அடிமைகளாக வீழ்த்தப்படுவர். காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை என கவர்னர் ரவி கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்றார். தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் தலைமை வகித்தார். மேயர் இளமதி, மாநில அமைப்பாளர் கழுராம்பன்,வேலுார் பல்கலை வேந்தர் விசுவநாதன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பிரேம்ஜி
ஜன 30, 2024 07:35

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அன்பர்கள் கோபித்துக் கொள்வார்கள். இவர் குறள் படித்திருக்க வாய்ப்பில்லை.எல்லோருமே அரசியல் வியாபாரிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை