உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுற்றுலா பயணிகள் கொடையில் உற்சாகம்

சுற்றுலா பயணிகள் கொடையில் உற்சாகம்

கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று விடுமுறையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர்.இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசித்தனர். ஏரி சாலையில் சைக்கிள், குதிரை சவாரி , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம், லேசான சாரல் மழை என ரம்யமான சூழல் நிலவியது.காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி