உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் பாரவேல் மண்டப பாதையில் தொடரும் நெரிசல்

பழநி கோயில் பாரவேல் மண்டப பாதையில் தொடரும் நெரிசல்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில்பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைள் எடுத்துள்ளது. கூட்டம் அதிகமான நேரங்களில் கட்டணமில்லா பொது தரிசன வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. 10 ரூபாய் தரிசன டிக்கெட் வரிசையிலும் இதே நிலை நீடிக்கிறது. இந்த இரு தரிசன பக்தர்களும் வெவ்வேறு பாதையில் வந்து பாரவேல் மண்டபம் நுழைவு வாயிலில் ஒன்றிணைகின்றனர். இதனால் நுழைவு வாயிலில் நெரிசல் ஏற்படுகிறது. பெண்கள், சிறுவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். தனித்தனியாக இரு வரிசையில் பக்தர்களை அனுமதித்தால் நெரிசல் எற்படாது. இதனை முறைப்படுத்த கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ