உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோல்டன் ஹவர்ஸ் ஐ பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் விபத்தை தவிர்க்க போக்குவரத்து துறை வேண்டுகோள்

கோல்டன் ஹவர்ஸ் ஐ பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் விபத்தை தவிர்க்க போக்குவரத்து துறை வேண்டுகோள்

திண்டுக்கல்: 'கோல்டன் ஹவர்ஸ்'திட்டத்தை பயன்படுத்தி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10 ஆயிரத்தடன் ரிவார்டுகளை பெற்றுகொள்ள திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாவட்டத்தில் பழநி,கொடைக்கானல் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்கள் உள்ளன. இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் டூவீலர்கள், கார்களில் குடும்பத்தோடு வருகின்றனர்.இதனால் வாகன பயன்பாடுகள் மாவட்டத்தில் அதிகமாக இருப்பதால் விபத்துக்களும் அதிகளவில் நடக்கின்றன. விபத்துகள் நடக்கும் நேரங்களில் அதை பார்ப்பவர்களில் சிலர் உதவி செய்கின்றனர். சிலர் போலீஸ் கேஸ் வந்து விடுமோ என்ற எண்ணத்தில் அந்த இடத்தை விட்டு கடந்து செல்கின்றனர். இதனால் உதவி செய்ய ஆள் இல்லாமல் பலர் விபத்துக்களில் சிக்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது. அரசு சார்பில் 108 ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவதற்காக பயன்பாட்டில் உள்ளது. இதுமட்டுமின்றி 'கோல்டன் ஹவர்ஸ்' எனும் திட்டமும் இதில் செயல்படுத்தப்படுகிறது. விபத்தில் யாராவது சிக்கியிருந்தால் அருகிலிருப்பவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் ரிவார்டாக ரூ.10 ஆயிரம் வரை இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதை பொது மக்கள் பயன்படுத்தினால் விபத்தில் சிக்கியவரின் உயிரும் காப்பாற்றப்படும். தங்களுக்கும் பரிசு கிடைக்கும் என போக்கவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வித வழக்கும் வராது

திண்டுக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ கூறியதாவது: விபத்தில் சிக்கியவரை குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்தால் உயிரை காப்பற்றலாம். அப்போது இருக்கும் நேரத்தை தான் கோல்டன் ஹவர்ஸ் என சொல்கிறோம். இத்திட்டம் செயல்பாட்டில் இருப்பதே யாருக்கும் தெரியாமல் உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தால் யார் மீதும் எவ்வித வழக்குகளும் பதியப்படுவதில்லை. ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் . 108 ஆம்புலன்ஸ் சேவையை மக்கள் பயன்படுத்துங்கள். விலை மதிப்பில்லாத மனித உயிர்களை காப்பாற்றுங்கள் .அதேநேரத்தில் ஆம்புலன்ஸ் செல்லும் போது வழிவிடாமல் சென்றால் சம்பந்தபட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி