உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கார் மீது விழுந்த மரம்: டிரைவர் பலி

 கார் மீது விழுந்த மரம்: டிரைவர் பலி

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாச்சலுார் ரோட்டில் கார் மீது மரம் விழுந்து டிரைவர் பலியானார். வாடிபட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு பள்ளத்துகால்வாயில் விவசாய நிலம் உள்ளது. நேற்று இங்கு காரில் தந்தார். காரை பட்டிவீரன்பட்டி அண்ணாநகரை சேர்ந்த மணிகண்டன் 46, ஒட்டினார். பெரியூர் பாச்சலுார் ரோட்டில் சென்ற போது காரின் மீது ராட்சத மரம் விழுந்தது. மணிகண்டன் பலியானார். வெற்றிவேல் தப்பினார். 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மலைப்பகுதி ரோடுகளில் விபத்தை ஏற்படுத்தும் மரங்களை அகற்றாமல் விபத்து அபாயத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை