உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடைக்கானல் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 கொடைக்கானல் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் -- வத்தலக்குண்டு ரோட்டில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்ததால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். பெருமாள்மலை அடுக்கம் ரோடு அருகே நேற்று மதியம் வனப்பகுதியிலிருந்து மரம் விழுந்தது. தொடர் விடுமுறையால் ஏராளமான பயணிகள் மலை நகரில் முகாமிடுவதால் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மரம் விழுந்தவுடன் நெடுஞ்சாலைத்துறையினர் தகவல் கிடைத்தும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மரத்தை அகற்ற தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக 2 மணி நேர தாமதத்திற்கு பின் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுபோல் கொடைக்கானல் பூம்பாறை இடையே கிருஷ்ணன் கோயில் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அரசு பஸ் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனங்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு 1மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் போக்குவரத்து சீரானது. மன்னவனூர் வரை நீடித்த நெரிசலால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை