உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / த.வெ.க., நிர்வாகி தற்கொலை முயற்சி பதவி பறிப்பால் விரக்தி

த.வெ.க., நிர்வாகி தற்கொலை முயற்சி பதவி பறிப்பால் விரக்தி

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் பதவி பறிக்கப்பட்ட விரக்தியில் த.வெ.க., நிர்வாகி அபினேஷ் 26, அதிக துாக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.வத்தலக்குண்டு எழில்நகர் அபினேஷூக்கு த.வெ.க., ஒன்றிய தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்ட் முன் புதிதாக அமைக்கப்பட்ட கொடி மேடை கல்வெட்டில் ஒன்றிய புதிய நிர்வாகிகள் பெயர் இருந்தது. தங்கள் பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அபினேஷ், தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் 30க்கு மேற்பட்டோர் கொடியேற்றிய அன்று புதியவர்களுக்கு பதவி வழங்கிய மாவட்ட நிர்வாகிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பதவி பறிக்கப்பட்டதாக எண்ணிய அபினேஷ் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை