உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார் மோதி இருவர் காயம்

கார் மோதி இருவர் காயம்

வேடசந்துார் : வேடசந்துார் நாகம்பட்டியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மதன்குமார் 23. இவர் வீட்டிலிருந்து தனது டூவீலரில் அதே ஊரைச் சேர்ந்த நண்பர் வினோத் பாண்டியை ஏற்றி சென்றார். டூவீலர் வேடசந்துார் திண்டுக்கல் ரோட்டில் வந்த போது எதிரே வந்த எவரெடி நுாற்பாலை அருகே குடியிருக்கும் ராஜ்குமார்,ஓட்டி வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் மதன்குமார்,வினோத் பாண்டி இருவரும் காயமடைந்தனர். எஸ்.ஐ., வேலுமணி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ