உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சகதிகாடாய் மாறிய வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட்

சகதிகாடாய் மாறிய வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட்

வேடசந்துார்: வேடசந்துாரில் சகதி காடாய் மாறிய பஸ் ஸ்டாண்டை சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடசந்துாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருவதால் கரூர் ரோட்டில் நடராஜா தியேட்டர் அருகே வெட்ட தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. ஆறு மாதமாக எந்த பிரச்னையும் இன்றி செயல்பட்டு வந்த இந்த பஸ் ஸ்டாண்ட் தற்போது மழையால் சகதிக்கடாய் மாறிவிட்டது. பயணிகள் பாதிக்கின்றனர். இதே நிலையில் தான் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லும் பிரிவு ரோடும் உள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி ஓட்டுனர், நடத்துநரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இரு மாதங்களுக்கு மழைக்காலம் உள்ளதால் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களின் நலன் கருதி பஸ் ஸ்டாண்டை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி