உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீரமகாமுனி கோயில் திருவிழா

வீரமகாமுனி கோயில் திருவிழா

செந்துறை : செந்துறை கோட்டைப்பட்டி வீரமகாமுனிகோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவையொட்டி மார்ச் 9ல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாணவேடிக்கைகளுடன் சுவாமிக்கு ஏகவேஷ்டி அணியும் நிகழ்ச்சி நடந்தது. தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.திருவிழாவில் கிடாய்கள் வெட்டி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !