உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காதலி, தங்கையை தொந்தரவு செய்ததால் கொலை செய்தோம்; நத்தம் வாலிபர் கொலை வழக்கில் கைதானவர்கள் தகவல்

 காதலி, தங்கையை தொந்தரவு செய்ததால் கொலை செய்தோம்; நத்தம் வாலிபர் கொலை வழக்கில் கைதானவர்கள் தகவல்

நத்தம்: நத்தம் அருகே வாலிபர் கொலை வழக்கில் இருவரை போலீசார் கைது செய்த நிலையில், கைதானவர்களின் காதலி, தங்கையை தொந்தரவு செய்ததால் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். நத்தம் கோசுகுறிச்சி- கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் சூர்யா 27. நேற்று முன்தினம் இரவு அப்பகுதி கண்மாய்கரையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் விசாரணை தொடர்ந்து மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. நத்தம் இன்ஸ்பெக்டர் பொன். குணசேகரன், எஸ்.ஐ., அருண் நாராயணன், கிருஷ்ணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் சூர்யாவிற்கும் முஸ்தம்பட்டியை சேர்ந்த பசுபதி , கம்பிளியம்பட்டியை சேர்ந்த மனோகரன் ஆகியோருடன் முன்விரோதம் இருந்தது தெரிந்தது. இதை தொடர்ந்து அதே பகுதியில் பதுங்கி இருந்த இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில்,பசுபதியின் தங்கச்சியை சூர்யா தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், இதுபோல் பசுபதியின் காதலியான மனோகரனின் தங்கையை அடிக்கடி தொந்தரவு செய்ததால் சூர்யாவை இருவரும் தீர்த்து கட்ட முடிவு செய்தனர். கண்மாய்கரையில் சூர்யா உடன் மது அருந்தியபடி சூர்யா தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை