உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / என்னங்க சார் உங்க சட்டம்; துணை முதல்வர் வருகிறார் என்றதும் பணிகளில் துரிதம்; குப்பை அள்ளுதல் முதல் ஆக்கிரமிப்பு அகற்றமும் ஜோர்

என்னங்க சார் உங்க சட்டம்; துணை முதல்வர் வருகிறார் என்றதும் பணிகளில் துரிதம்; குப்பை அள்ளுதல் முதல் ஆக்கிரமிப்பு அகற்றமும் ஜோர்

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வருகிறார் என்றதும் குப்பை அள்ளுவது தொடங்கி ஆக்கிரமிப்பு அகற்றம் வரை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதிருப்தியடைந்துள்ள மக்கள் எப்போதுமே இந்த பணிகளை செய்ய வேண்டியது தானே என கேள்விகளை எழுப்புகின்றனர்.துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி திண்டுக்கல்லுக்கு இன்று மாலை வருகிறார். இரவு தங்கும் அவர் நாளை காலை நத்தத்தில் நடக்கும் தி.மு.க., நிர்வாகி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையொட்டி அவர் வரும் பாதையில் உள்ள ரோடுகளில் பேட்ச் ஒர்க், ரோடுகளை சுத்தப்படுத்துவது, சாக்கடைகளை துார்வாருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி வாரியாக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.அவசரகதியில் செய்யப்படும் இது போன்ற பணிகளால் எதுவும் தரமாக இருப்பதில்லை. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது துணை முதல்வர் வருகைக்காக செய்யப்படும் பணிகள் அனைத்துமே பொதுமக்கள் எப்போதும் நடக்க வேண்டுமென என எதிர்பார்க்கும் பணிகள் தான். இத்தனை நாட்கள் நிதிப்பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறை என காரணங்களை அடுக்கி வந்த அதிகாரிகள் தற்போது மட்டும் எப்படி தீவிரமாக பணியாற்றுகிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.சாக்கடைகளை துார்வார வேண்டும், குப்பைகளை அகற்ற வேண்டுமென பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் நடக்காத பணிகள் எல்லாம் தற்போது நடக்கிறது. இதுவும் போர்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இது போன்ற பணிகளை துணை முதல்வர் வருகிறார் என்றதும் செய்யும் அதிகாரிகள் மக்களுக்காக எப்போதும் இது போன்று சுறுசுறுப்புடன் பணி ஆற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Matt P
நவ 14, 2024 02:34

சரி .ஓவ்வொரு நாளைக்கும் ஓவ்வொரு வூருக்கு வாங்க. அப்படியாவது நாடு சுத்தமாவுதான்னு பாப்போம். உறக்கம் , வூரு இப்படி தான் இருக்கணும். சுத்தமா இல்லாத வூருக்கு போய் இவருக்கு உடம்பு சரியில்லாம ஆயிடுச்சின்னா. அப்புறம் நாட்டு மக்களை தான் குறை சொல்லுவாங்க. ராசா வீட்டு புள்ளை இவரு.


ARUN KUMAR
அக் 21, 2024 15:25

அடேய்.. மொ.... கு...


அப்பாவி
அக் 20, 2024 17:45

அந்தக் காலத்திலேயே பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் வர்றாருன்னு தெரிஞ்ச உடனேயே மாணவர்களை வெச்சு கூட்டி பெருக்கி சுத்தம் செய்வார்கள். அவுரு வந்து இவிங்க செலவில் நல்லா சாப்பிடுவாரு. சர்டிபிகேட் குடுத்துட்டு போவாரு. அதே ஏமாத்து வேலைதான் இன்னிக்கும் நடக்குது. திருட்டு இந்தியர்களின் கண்டுபிடிப்பு. நாம பாக்காத மாமல்லபுரம் க்ளீனிங்கா கோவாலு? ஜீ எடுக்கறதுக்காக ஒரே ஒரு பீஸ் குப்பை மட்டும் போட்டு பிலிம் காட்டுனாங்களே .


venugopal s
அக் 20, 2024 17:29

ஏதோ இப்போதாவது செய்கிறார்களே என்று சந்தோஷப் படுவதை விட்டு விட்டு!


Matt P
நவ 15, 2024 07:19

இப்போதாவது செய்கிறார்களே. திமுக விசுவாசி இப்படி தான் சொல்ல முடியும்.


வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 16:14

துணை முதல்வரின் வருகையால் பணிகள் நடப்பது நல்லது தானே? இங்க என்ன குஜராத் மாதிரி தட்டி கட்டி மறைக்கிறாங்களா என்ன?


Matt P
நவ 15, 2024 07:18

உங்க இளவரசர் வந்தால் வூரு மணமாயிருக்கணும், அவர் வராட்டி வூரு நாத்தம் எடுக்கணும். நல்லாயிருக்கயா உங்க கூத்து.


வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 16:13

என்னது?? "குப்பை அள்ளுவது தொடங்கி ஆக்கிரமிப்பு அகற்றம் வரை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதிருப்தியடைந்துள்ள மக்கள்" - பணிகள் துரிதமாக நடப்பதால் மக்களுக்கு அதிருப்தியா? யார்ரா அந்த மக்கள்?? துணை முதல்வரின் வருகையால் பணிகள் நடப்பது நல்லது தானே? இங்க என்ன குஜராத் மாதிரி தட்டி கட்டி மறைக்கிறாங்களா என்ன?


raja
அக் 20, 2024 15:44

இது தான்டா திராவிட மாடல்...எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத விடியல் ஆட்சி...


Bhaskaran
அக் 20, 2024 12:51

நாற்றம் தாங்காமல் பிள்ளை உடம்புக்கு ஏதாவது வந்தவுடன் கூடாதுன்னு அவங்க அம்மா ஆர்டர் போலும்


VENKATASUBRAMANIAN
அக் 20, 2024 08:25

இதுதான் திராவிட மாடல் அரசு


...
அக் 20, 2024 08:17

அவர் காரில் வருமபோது குப்பை வாசம் அடிக்கக் கூடாதாம்.வண்டி குலுங்கக்கூடாதாம் அதான் வேலை செய்றாங்க .அவர்கள் மட்டுமே மக்கள் நாம் மாக்கள்


சமீபத்திய செய்தி