உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாதி எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு

பாதி எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு

கன்னிவாடி : கன்னிவாடி அருகே அமைதிச்சோலை நீரோடை பகுதியில் பாதி எரிந்த நிலையிலிருந்த இளம்பெண் உடலை போலீசார் மீட்டனர்.தருமத்துப்பட்டி-பன்றிமலை ரோட்டில் அமைதிச்சோலை அருகே 60 அடி ஆழத்தில் ஆதிமூலம் நீரோடை உள்ளது. நேற்று மாலை கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற சிலர் ஒரு உடல் தீப்பற்றி எரிவதை கண்டனர். அமைதிச்சோலை கிராமத்தினருக்கு தெரிவித்த பின், கன்னிவாடி போலீசார் வரவழைக்கப்பட்டனர். நேற்றிரவு 9:00 மணிக்கு டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பாதி எரிந்த நிலையிலிருந்த ஒரு பெண் உடலை மீட்டனர்.போலீசார் கூறியதாவது: 17 வயது மதிப்புள்ள பெண்ணின் உடல் பெருமளவு எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் யார், இங்கு எப்படி வந்தார் என்பதை வழித்தட கிராமங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு விசாரணை நடக்கிறது. கொலை செய்யப்பட்டாரா, தற்கொலையா என விரைவில் தெரியவரும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை