உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மதகுகளை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம்

மதகுகளை சீரமைக்க விவசாயிகள் தீர்மானம்

ஈரோடு,தமிழக விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாநில தலைவர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பு உட்பட பலர் பங்கேற்றனர். கீழ்பவானி பாசனத்துக்கு வரும், 15ல் தண்ணீர் திறக்க உள்ளதால், மதகுகளை சீரமைக்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தில் மராமத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஈரோடு மாவட்டத்தில், 1,000 ஏக்கருக்கு மேல் 'கண்டிஷன் பட்டா, பவானிசாகர் புராஜெக்ட் பட்டா' என உள்ளது. அவற்றை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை