சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய நிலம் சீரமைப்புஉரிமையாளருக்கு நகராட்சி பாராட்டு
சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய நிலம் சீரமைப்புஉரிமையாளருக்கு நகராட்சி பாராட்டுவெள்ளகோவில், :வெள்ளகோவில் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய மூன்று ஏக்கர் நிலத்தை சரி செய்த நில உரிமையாளருக்கு நகராட்சி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.வெள்ளகோவில் நகராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட குமாரவலசு பகுதியில், பர்வதம் என்பவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. நிலத்தில் சம்பு தட்டு எனப்படும் தாவரங்கள் புதர் மண்டிய நிலையில் வளர்ந்திருந்தது. இதனால் விஷ ஜந்துக்கள், கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதுடன், குடியிருப்புவாசிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.இந்த இடத்தை சரி செய்து அச்சத்தை போக்க, நகராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நகராட்சி தலைவர் கனியரசி, கமிஷனர் வெங்கடேஷ்வரன் ஆகியோர், நில உரிமையாளர் பர்வதத்தை தொடர்பு கொண்டு, மக்களின் நிலையை விளக்கினர். இதையடுத்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து, புதர்களை அகற்றி, மண்ணை கொட்டி நிலத்தை மைதானம் போல் சமன் செய்துள்ளார். இதனால் மக்களின் அச்சமும் நீங்கியுள்ளது. அவரின் இந்த செயலுக்கு நகராட்சி நிர்வாகம், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.நகராட்சி பகுதியில் காலி இடம் வைத்திருப்பவர்கள் தங்கள் இடத்தை துாய்மையாக பராமரித்து, ஒத்துழைப்பு தருமாறு, நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.