மேலும் செய்திகள்
நெடுஞ்சாலைத்துறையில் உள்ளிருப்பு போராட்டம்
26-Oct-2024
அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு
28-Oct-2024
அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடுஈரோடு, நவ. 24-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமையில், ஈரோட்டில் நடந்தது. துணை தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் சரவணமணி, மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் உட்பட பலர் பேசினர். மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.கோபி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சாலை பணியாளர் சங்கம் சார்பில் நடந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்களின், ஆறு நாள் ஊதிய பிடித்தத்தை வழங்க வேண்டும். தாளவாடி வட்டாரத்துக்கு தனி சார்நிலை கருவூலம் ஏற்படுத்த வேண்டும். தாளவாடி பகுதி அரசு ஊழியர்களுக்கு அரசு குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
26-Oct-2024
28-Oct-2024