உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பட்டப்பகலில் ஆடு திருட முயன்றவர் கைது

பட்டப்பகலில் ஆடு திருட முயன்றவர் கைது

பட்டப்பகலில் ஆடு திருட முயன்றவர் கைதுநம்பியூர்:நம்பியூர் அருகே இருகாலுார் சாலையில் வசிப்பவர் துளசிமணி, 65; கணவர் இறந்த நிலையில், ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்துகிறார். ஆடுகளை கடந்த, 6ம் தேதி மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒருவர், ஒரு ஆட்டை திருடிக்கொண்டு தப்ப முயன்றார். இதைப்பார்த்து அவர் கூச்சலிடவே, அப்பகுதியினர் சுற்றி வளைத்து பிடித்து, நம்பியூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சேவூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை