சமூக நலத்துறை உதவி பெறஆண்டு வருவாய் உயர்வு
சமூக நலத்துறை உதவி பெறஆண்டு வருவாய் உயர்வுஈரோடு:சமூக நலத்துறை மூலம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக குழந்தை பாதுகாப்பு திட்டம், ஈ.வெ.ரா., மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், தொழிற்கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, இணை உறுப்பினர் அனுமதி, தையல் பயிற்சி சேர்க்கை போன்ற நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதைப்பெற பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பு, 72,000 ரூபாயாக இருந்தது. தற்போது, 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தி, ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.