மேலும் செய்திகள்
காளிங்கராயன் பாசனத்தில் நெல் அறுவடை தீவிரம்
07-Dec-2024
தொடர் மழையால் நெல் அறுவடை பாதிப்புஈரோடு, டிச. 14-காளிங்கராயன் பாசன வாய்க்காலை ஒட்டிய பகுதியில் அறுவடைக்கு தயாராகிய நிலையில், தொடர் மழையால் கதிர்கள் பாதித்துள்ளன.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர் மூலம், காளிங்கராயன் வாய்க்கால் பாசனப்பகுதியில், 15,450 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட இப்பாசன பகுதியில், நெல், கரும்பு, மக்காசோளம், மரவள்ளி கிழங்கு, மஞ்சள் போன்றவை அதிகம் பயிரிடுவர். தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், இப்பகுதியில் அறுவடைப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.அறுவடை செய்தாலும், உலர்த்த இயலாது என்பதாலும், வயலுக்குள் இயந்திரங்கள் இறங்க இயலாது என்பதாலும் அறுவடை நடக்கவில்லை.இருப்பினும், முற்றிய நெல் மணிகள் பல மணி நேரமாக நனைந்து, பதறாக மாறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வயலுக்குள் தண்ணீர் தேங்காமல் இருக்கும் பணியை தொடர்ந்துள்ளனர். ஆனால், வெயில் அடிக்காததால், தண்ணீர் வடிந்தாலும் ஈரப்பதமாகவே பல வயல்கள் காணப்படுகிறது. இன்னும் இரு நாட்களுக்கு மேல் மழை தொடர்ந்தால், பல நுாறு ஏக்கர் நெற்பயிர் முற்றிலும் பாதிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
07-Dec-2024