உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உதவித்தொகை பெற அவகாசம் நீட்டிப்பு

உதவித்தொகை பெற அவகாசம் நீட்டிப்பு

உதவித்தொகை பெற அவகாசம் நீட்டிப்புஈரோடு, அக். 20-இளம் சாதனையாளர்கள், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற வரும், 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு, பிரதமரின் கல்வி உதவி தொகை திட்டம் செயல்படுகிறது. 2024-25ம் ஆண்டுக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் படிக்கும் தமிழக மாணவர்கள், உதவித்தொகை பெறலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பயனடைந்த மாணவர்களும், நடப்பாண்டுக்கு புதுப்பிக்கலாம். இத்திட்டத்தில் நடப்பாண்டு, 9 மற்றும், பிளஸ் 1 படிப்போர், முறையே, 8 மற்றும், 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, கல்வி உதவித்தொகை பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை