உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மோசடி புகாரளிக்கவந்த பெண் மயக்கம்

மோசடி புகாரளிக்கவந்த பெண் மயக்கம்

மோசடி புகாரளிக்கவந்த பெண் மயக்கம்ஈரோடு, கோபி, கணக்கம்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆண்டவர் மனைவி தனலட்சுமி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்க வந்தவர், வளாகத்தில் மயங்கி விழுந்தார். அவரை மீட்ட போலீசார், மனுவை பெற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். மனு விபரம்: எங்களது ஊரை சேர்ந்த சிலர், என்னிடமும், எனது கணவரிடமும், 60,000 ரூபாய் ரொக்கப்பணம் உட்பட, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணம், பொருட்களை வாங்கி சென்றனர். வேறு சிலரிடமும் 8 லட்சம் ரூபாய் வரை பெற்று கொண்டு, பணத்தை தர மறுக்கின்றனர்.இதுபற்றி பங்களாபுதுார் போலீசாரில் புகார் செய்தும், அவர்களுக்கு சாதகமாக போலீசார் நடந்து , எங்களை சமாதானமாக செல்லும்படி பேசுகின்றனர். இப்பிரச்னையால் கணவர் உடல் நலம் பாதித்து கவலைக்கிடமாக உள்ளார். இதுபற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால், எனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை