மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
11-Jan-2025
மின்சாரம் தாக்கி விவசாயி பலிதாராபுரம்:தாராபுரம் அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி பலியானார்.தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிராஜுதீன், 42; நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் குத்தகை தோட்டத்துக்கு நடந்து சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் நள்ளிரவில் தோட்டத்துக்கு சென்றபோது, இறந்து கிடந்தார். புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Jan-2025