மேலும் செய்திகள்
தொழில் பழகுனர் சேர்க்கை; நாளை ஈரோட்டில் முகாம்
18-Feb-2025
ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில்நாளை அப்ரன்டிஷிப் தேர்வு ஈரோடு:கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், கரூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கும்படி, ஈரோடு காசிபாளையம், சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ.,யில் மண்டல அளவிலான 'டிரேடு அப்ரன்டிஷிப் என்கேஜ்மென்ட் பேர்' நாளை நடக்கிறது.இதில் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள், தொழில் பழகுனர்கள் காலி இடங்களக்கு அப்ரன்டிஷிப் தேர்ந்தெடுக்க உள்ளனர். கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பயிற்சியாளர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ், என்.டி.சி., சான்றிதழ், மொபைல் எண், மெயில் ஐ.டி., - ஆதார் எண், வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
18-Feb-2025