பாம்பு கடித்து சிறுவன் பலி
பாம்பு கடித்து சிறுவன் பலிபெருந்துறை:பெருந்துறை, கருக்கங்காட்டூரை சேர்ந்த சதீஸ்குமார் மகன் கவுதம், 10; சின்னவேட்டுவபாளையம் அரசு ஆரம்ப பள்ளி நான்காம் வகுப்பு மாணவன். நேற்று முன்தினம் மாலை வீட்டருகில் விளையாடிய போது பாம்பு கடித்துள்ளது. தந்தையிடம் கூறவே பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் இறந்தான். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.