உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் நாளை மஹா நவசண்டி யாகம்

சென்னிமலையில் நாளை மஹா நவசண்டி யாகம்

சென்னிமலை: சென்னிமலையில் காங்கேயம் பிரதான சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில், உலக நன்மைக்காக நான்காமாண்டு மங்கள நவ சண்டி யாகம் நாளை காலை தொடங்குகிறது. கணபதி ேஹாமத்தை தொடர்ந்து மாலையில் புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் காலை விக்-னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, தேவி கல-சத்திற்கு நவாவரண பூஜை, அக்னி காரியம், 13 அத்தியா ஹோமம், நவசண்டியாகம், சண்டி யாக சங்கல்பம் பஞ்சகவ்யம், சுமங்கலி பூஜை, கன்-னியா பூஜை, வடுக பூஜை, மங்கல மஹா பூர்-ணாகுதி, கலசாபிஷேக பூஜையை தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கால பைரவ விழாக்குழு அன்பர்கள் செய்து வரு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை