ஈரோடு : ஈரோட்டில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில், இரு மகள்களை விஷம் கொடுத்து கொன்று விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு, கருங்கல்பாளையம், பச்சையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன், 46; காலையில் காய்கறி விற்பனையும், மற்ற நேரங்களில் பேக்கரி, ேஹாட்டல்களில் சமையல், பேக்கரி உணவு பொருட்கள் தயார் செய்து கொடுக்கும் வேலை செய்-கிறார். இவரின் மனைவி ஹசீனா, 39. இவர்களின் மகள்கள் ஆயிஷா பாத்திமா, 16; ஜனா பாத்திமா, 14; இருவரும் முறையே பிளஸ் 1, எட்டாம் வகுப்பு படித்தனர். ஜாகீர் உசேனுக்கு கடன் பிரச்னை இருந்ததுடன், மனைவி-யுடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் ஜாகீர் உசேன், வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த ஹசீனா மதியம் இரு குழந்தைக-ளுக்கும் விஷம் கொடுத்து, மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, பக்கத்து அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் ஹசீனாவை மொபைல்போனில் ஜாகீர் உசேன் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்காததால், பக்கத்து வீட்டில் இருந்தவர்களை சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, மூன்று பேரும் இறந்து கிடந்-ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்து ஜாகீர் உசேன் விரைந்தார். கருங்கல்பாளையம் போலீசார் மூவரின் உடல்களை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸ் விசாரணையில், 'கணவன் - மனைவி இடையே நேற்று காலை சண்டை நடந்துள்ளது. இதனால் மனமுடைந்து மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு, ஹசீனா தற்கொலை செய்-துள்ளார். தற்கொலைக்கு முன், ஹசீனா மற்றும் குழந்தைகள் கடிதம் எழுதி வைத்துள்ளனர். அக்கடிதம் உருது மொழியில் இருந்தது' என, போலீசார் தெரிவித்தனர்.கடிதத்தில் மகள்கள், 'என் தந்தையை நன்றாக பார்த்து கொள்-ளுங்கள். அவரை மது அருந்தக்கூடாது என கூறுங்கள்' என்றும், வேறு சில விபரங்களும் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்-தனர். இரு மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.