உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.ஐ., கன்னத்தை கடித்தவர் கைது

எஸ்.ஐ., கன்னத்தை கடித்தவர் கைது

கோபிசெட்டிபாளையம்: போலீஸ் எஸ்.ஐ., கன்னத்தை கடித்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் உக்கரம் குப்பன்துறை காலனியை சேர்ந்தவர் கோபால்(45). பிடிவாரண்ட் கைதி. கடந்த சில நாட்களுக்கு முன் உக்கரம் பகுதியில் கோபால் பதுங்கி இருப்பதாக, கடத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் எஸ்.ஐ.,கள் மோகன், பத்தரப்பன் ஆகியோர் நேற்று காலை கோபாலை பிடிக்க விரைந்தனர். எஸ்.ஐ.,களை பார்த்த கோபால், அங்கிருந்து தப்பி ஓடினார். எஸ்.ஐ.,கள் அவரை துரத்தி பிடித்தனர். அப்போது எஸ்.ஐ., மோகனின் கன்னத்தை கடித்து துப்பி, வயிறு, காது ஆகிய இடங்களையும் கடித்து விட்டு, எஸ்.ஐ., பத்தரப்பனை எட்டி உதைத்து விட்டு கோபால் தப்பி ஓடினார். கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். மேட்டுகடை பகுதியில் இருந்த கோபாலை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை