மேலும் செய்திகள்
உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு
06-Feb-2025
கல்வி உதவித்தொகைவிண்ணப்பம் வரவேற்புஈரோடு, :அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவியர் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, பிரதம மந்திரியின் யாசஷ்வி திட்டத்தில் பெறலாம். அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், 3ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயில்வோர் எவ்வித வருமான வரம்பு நிபந்தனை இன்றி உதவித்தொகை பெறலாம். முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டில் பயில்வோரின் பெற்றோர் ஆண்டு வருவாய், 2.50 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் விபரத்துக்கு ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்: 0424 2260155 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
06-Feb-2025