இழப்பீடு வழக்கில்அரசு பஸ் ஜப்தி
இழப்பீடு வழக்கில்அரசு பஸ் ஜப்திதாராபுரம்:தாராபுரத்தை அடுத்த குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 35, தனியார் பஸ் டிரைவர். கடந்த, 2018, ஜனவரி 24ல், தாராபுரம்-திருப்பூர் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, மதுரையில் இருந்து கோவை சென்ற அரசு பஸ் மோதியதில் பலியானார். இறந்த முருகேசனின் குடும்பத்தினர், தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், முருகேசன் குடும்பத்தாருக்கு, 11.௯௬ லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. தொகையை செலுத்தாததால் நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர். இதை விசாரித்த தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன், வட்டியுடன் சேர்த்து, 16.௮௯ லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவிட்டார். இதையும் செலுத்தாத நிலையில், தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் வந்த அரசு பஸ்சை, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.