மேலும் செய்திகள்
வெள்ளித்திருப்பூரில்குடிநீர் கேட்டு மறியல்
21-Mar-2025
ஒரிச்சேரியில் குடிநீர் கேட்டு மறியல்பவானி:பவானி அருகே ஒரிச்சேரி பஞ்., ஒன்பதாவது வார்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த, 15 நாட்களாக, பிரதான குழாய் உடைப்பால், குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்தும், குடிநீர் கேட்டும், ஒரிச்சேரியில் பவானி - அத்தாணி சாலையில், பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆப்பக்கூடல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பஞ்., செயலாளர் பூங்கொடி, யூனியன் பி.டி.ஓ., வந்தால் மட்டுமே, மறியலை கைவிடுவோம் என்றனர்.ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பவானி பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தி வந்தார். ஆனால் பஞ்., செயலாளர் வரவில்லை. உடைந்த குழாயை சரி செய்து, இரவுக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி கூறவே, மறியலை கைவிட்டனர்.
21-Mar-2025