உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு பெருமாள் கோவிலில்27 முறை வலம் வந்த பக்தர்கள்

ஈரோடு பெருமாள் கோவிலில்27 முறை வலம் வந்த பக்தர்கள்

ஈரோடு பெருமாள் கோவிலில்27 முறை வலம் வந்த பக்தர்கள்ஈரோடு:விஷ்ணுபதி காலமான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள், 27 முறை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.தமிழ் மாதங்களில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விஷ்ணுபதி காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலத்தில் பெருமாள் கோவிலில், 27 முறை வலம் வந்து வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்கள் ஐதீகம். மாசி மாதம் நேற்று மதியம் துவங்கியதாக கணக்கிட்டு, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல், 27 முறை கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை