உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி நகராட்சி கூட்டத்தில் 37 தீர்மானம் நிறைவேற்றம்

கோபி நகராட்சி கூட்டத்தில் 37 தீர்மானம் நிறைவேற்றம்

கோபி: கோபி நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம், சேர்மன் நாகராஜ், பொறியாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், 30 கவுன்-சிலர்கள் பங்கேற்றனர். சாக்கடையை துார்வார, குப்பைகளை முறையாக அள்ள, கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். வார்டு பகுதியில் மக்கள் பயன்பாட்-டுக்கு, புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி நிறுவ கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே உள்ள சின்டெக்ஸ் தொட்டி நீரை, கால்நடைகளுக்கும், கார் போன்ற வாகனங்களை கழுவ மக்கள் பயன்படுத்துவதாகவும், அதனால் தண்ணீர் வீணாவதுடன், மோட்டார் போன்ற சாதனங்கள் பழுதடைந்து, நகராட்சி நிர்வாகத்-துக்கு வீண் செலவு ஏற்படுவதாக அதிகாரிகள் பதில் தெரிவித்தனர். கூட்டத்தில், 37 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி