உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாழை தோட்டம் நாசம்

வாழை தோட்டம் நாசம்

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி சோமசுந்-தரம். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மூன்றரை ஏக்கர் நிலத்தில் கதளி மற்றும் நேந்திரம் வாழை நடவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஐந்து யானைகள் வாழை தோட்டத்துக்குள் புகுந்தன. தின்றும், மிதித்தும் ஆயிரக்கணக்கான வாழை மரங்களை சேதம் செய்தன. விடிய விடிய வாழைத்தோட்டத்தில் முகாமிட்ட யானைகள், விடிந்தவுடன் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. சேதமடைந்த வாழைகளுக்கு நஷ்டஈடு வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஜீரகள்ளி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ