உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாசனத்துக்கு தண்ணீர் திறக்க ஆர்.டி.ஓ.,விடம் முறையீடு

பாசனத்துக்கு தண்ணீர் திறக்க ஆர்.டி.ஓ.,விடம் முறையீடு

ஈரோடு:கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில், 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று மனு வழங்கினர். மனு விபரம்: பவானிசாகர் அணையில் இருந்து, 2ம் போக புன்செய் பாசனத்துக்கு ஜன.,7 முதல் மே, 1 வரை சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.இதை நம்பி கீழ்பவானி பாசன பகுதியில், ஒரு லட்சத்து, 3,500 ஏக்கரிலும், தாராபுரம் கட்டு, 34 கசிவு நீர் திட்டங்களில், 45,000 ஏக்கர் பாசனப்பகுதியினரும் புன்செய் பயிரிட்டனர். நான்காம் கட்ட நனைப்பு தண்ணீரையே, இரு நாட்கள் குறைத்த நிலையில், ஐந்தாம் கட்ட நனைப்புக்கு தண்ணீர் வழங்க இயலாது என நீர்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் எள், கடலை பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசனப்பகுதியில் பயிர்களை காப்பாற்ற, ஐந்தாம் நனைப்புக்கு தண்ணீர் விட வேண்டும். அல்லது பயிர் இழப்புக்கு ஏக்கருக்கு, 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ