உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆன்லைன் கட்டண உயர்வு கைவிட வலியுறுத்தி கடிதம்

ஆன்லைன் கட்டண உயர்வு கைவிட வலியுறுத்தி கடிதம்

ஈரோடு, ஈரோடு வரி செலுத்துவோர் சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பாரதி, பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர், தமிழக அரசு, ஈரோடு மாநகராட்சிக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது: தமிழக அரசு, 'ஆன்லைனில் கட்டட அனுமதி' என்று அறிவித்து, சதுரடிக்கு, 35 ரூபாயில் இருந்து, 79 ரூபாயாக கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே சொத்து வரி, குப்பை வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் இணைப்புக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உயர்வு நடந்துள்ளது. இதை தமிழக அரசு, மாநகராட்சி கைவிட வேண்டும். அதேசமயம் மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்து, இலவசமாக ஆன்லைன் பில்டிங் லைசென்ஸ் தருவதாக விளம்பரம் செய்வதை கைவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை