உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தன்னாசி முனியப்பன் கோவிலில் பொங்கல் விழா

தன்னாசி முனியப்பன் கோவிலில் பொங்கல் விழா

பவானி, அம்மாபேட்டையை அடுத்த மொண்டிபாளையத்தில் தன்னாசி முனியப்பன் கோவில் பண்டிகை, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, தன்னாசி முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி, உருவ பொம்மைகள் வைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் முனியப்பன் திருவீதி உலா நடந்தது. மறு பூஜையுடன் இன்று விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி