உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அக்கரைக்கு சென்று ஆற்றில் மூழ்கியவரின் உடல் மீட்பு

அக்கரைக்கு சென்று ஆற்றில் மூழ்கியவரின் உடல் மீட்பு

டி.என்.பாளையம், கோபி அருகே கலிங்கியம் பாரதி வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 37, பெயிண்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து மேஸ்திரி ஸ்ரீஹரி, நண்பர் கவின்குமார் ஆகியோருடன், கள்ளிப்பட்டி அருகே பவானி ஆற்று பரிசல் துறை பகுதியில் குளித்துள்ளார். மற்ற இருவரிடமும் அக்கரைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆழமான பகுதிக்கு சென்றபோது நீந்த முடியாமல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். நண்பர்கள் அதிர்ச்சியடைந்து கோபி தீயணைப்பு துறையினர், பங்களாப்புதுார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தேடும் பணி நடந்த நிலையில் இரவானதால் கைவிடப்பட்டது. நேற்று மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். குளித்த இடத்தில் இருந்து, ௧ கி.மீ., தொலைவில் ஈஸ்வரன் உடலை, கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று மாலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ