உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகரை அடுத்த புங்கார் காலனியை சேர்ந்த தம்பதி நாராயணன்-சாவித்திரி. மீன் பிடிக்கும் தொழிலாளர்கள். சிமெண்ட் சீட் வேய்ந்த வீட்டில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. சத்தி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தாலும், வீட்டில் இருந்த சாமான்கள், சமையல் பொருட்கள், துணிமணிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி தீ விபத்தில் சேதமடைந்த வீட்டை நேற்று பார்வையிட்டார். தம்பதியருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், நிவாரண உதவி தொகையாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார். ஒன்றிய செயலாளர் மகேந்திரன், புங்கார் பஞ்., தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்