உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேட்பாளர் கணக்கு தாக்கல் அதிகாரிகள் சரி பார்ப்பு

வேட்பாளர் கணக்கு தாக்கல் அதிகாரிகள் சரி பார்ப்பு

ஈரோடு:தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, ஈரோடு லோக்சபா தொகுதி தேர்தல் செலவின பார்வையாளராக ஐ.ஆர்.எஸ்., அதிகாரி லட்சுமி நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர்களின் செலவினங்களை வீடியோ பதிவுகள் மூலமும், நேரிலும் சென்று பார்வையிட்டு வருகிறார்.வேட்பு மனுத்தாக்கல் முதல், ஓட்டுப்பதிவுக்கு முன், 3 கட்டமாக தங்களது செலவினங்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி நேற்று, ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இதற்கான சிறப்பு ஏற்பாடு, லட்சுமிநாராயணா தலைமையில் நடந்தது. ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவரது முகவர்கள் ஆஜராகி, தங்களது வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தனர்.அதேநேரம், தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவினர், வேட்பாளர்களின் செயல்பாடு, கூட்டம், பிரசாரங்களில் ஆய்வு செய்து, அவர்களது தோராய செலவினத்தை குறித்து வைத்துள்ளனர். அதனுடன், வேட்பாளர் சமர்ப்பிக்கும் கணக்குகள் இணையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். தேர்தல் வரவு - செலவு ஒத்திசைவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. வரும் 11 மற்றும் 17 ல் இதேபோல் நடக்கும் கூட்டத்தில், செலவு கணக்குகளை வேட்பாளர்கள் தாக்கல் செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை