| ADDED : ஜூலை 18, 2024 01:42 AM
வீரபாண்டி: பராமரிப்பு பணிகளுக்காக, எல்.சி.115 எண் ரயில்வே கேட், 12 நாட்கள் மூடப்படுகிறது.சேலம் கொண்டலாம்பட்டியில் இருந்து, இட்டேரி சாலை வழி-யாக புத்துார் அக்ரஹாரம், நெய்காரப்பட்டி, காட்டூர், பெருமாம்-பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில், எல்.சி. 115 எண் கொண்ட ரயில்வே கேட் அமைந்-துள்ளது. சேலம்-கோவை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்-களும், இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் சேலம் ஜங்ஷ-னுக்கு சென்று வருகிறது.தினமும், 30க்கும் மேற்பட்ட ரயில்கள் கடக்கும் முக்கிய ரயில்வே தடம் இது. ரயில்வே கேட் பகுதியில், சாலை அரிப்பால் பள்ளங்கள் விழுந்து மேடு பள்ளமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறி விழுந்தனர். ஜல்லி மற்றும் சிமென்ட் கற்கள் பெயர்ந்து தண்டவாளங்கள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதை சரி செய்யவும், சாலை மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் கடந்த, 13 முதல் துவங்கி நடந்து வருகிறது. வரும், 24 வரை பணிகள் நடப்பதால், 12 நாட்கள் ரயில்வே கேட் மூடியே இருக்கும். பொதுமக்கள் மாற்று பாதையில் செல்-லும்படி, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.புத்துார் சுற்றுவட்டார பகுதி மக்கள், கொண்டலாம்பட்டிக்கு சென்று வர, 5 கி.மீ., சுற்றி செல்லும் நெய்காரப்பட்டி வழியை பயன்படுத்தி வருகின்றனர்.