உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் இன்ஜின் டிரைவர் 19 பேர் சஸ்பெண்ட்

ரயில் இன்ஜின் டிரைவர் 19 பேர் சஸ்பெண்ட்

ஈரோடு, பத்து மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. வாரத்துக்கு, 46 மணி நேர ஓய்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 1ம் தேதி முதல் தெற்கு ரயில்வே லோகோ பைலட்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஈடுபட்டதாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், 19 டிரைவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. இவர்கள் அனைவரும், ஈரோடு ரயில்வே பணிமனையை சேர்ந்தவர்கள். இந்த செயல் பழிவாங்கும் நடவடிக்கை என்று, ஈரோடு ரயில்வே ரயில் இன்ஜின் டிரைவர்கள் சங்க நிர்வாகி அருண்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ