உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்டர் மீடியனில் மோதிய லாரி; டிரைவர் தப்பினார்

சென்டர் மீடியனில் மோதிய லாரி; டிரைவர் தப்பினார்

பெருந்துறை: சீனாபுரம் அருகே பெருமாம்பாளையத்தில் தனியார் பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான டேங்கர் லாரி மூலம், கிராமங்களுக்கு சென்று உற்பத்தியாளர்களிடம் பால் சேகரித்து கொண்டு வரப்படுகிறது. நேற்று அதிகாலை பாலுடன் வந்த டேங்கர் லாரி, துடுப்பதி பிரிவு அருகே சாலை மையத்தில் வைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் மீது ஏறி விபத்தில் சிக்கியது. அந்த நேரத்தில் எதிரே வாகனங்கள் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லாரி டிரைவர் சதீஸ்குமார், 32, காயமின்றி உயிர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்