ஈரோடு: ஈரோடு, சி.என்.கல்லுாரி வளாகத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்து வரும், ஈரோடு புத்தக திருவிழாவின் நேற்றைய மாலை நேர அமர்வில், தலைவர் ஸ்டாலின் குணசே-கரன் வரவேற்றார்.சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதி கவுர-விக்கப்பட்டார்.'எங்கிருந்தோம்... எங்கிருக்கிறோம்... எங்கே செல்ல வேண்டும்' என்ற தலைப்பில், மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமை செயலர் கோ.பாலசந்திரன் பேசியதாவது:நாம் முன்னேற்ற பாதைக்கு செல்ல, நமது பழமை, பண்பாட்டு பெருமை, மாண்புகளை அறிய வேண்டும். அதில் நமது தமிழ் மொழி, அது உணர்த்திய பண்பாட்டை அறிந்தால் நாம் எங்கி-ருந்தோம், எங்கிருக்கிறோம், எங்கு செல்ல வேண்டும் என்பதை உணரலாம். பத்து பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், நால-டியார் என நமது பழம் பண்பாட்டை கூறி கொண்டே செல்-லலாம்.புறநானுாறு, சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்தும் நம் வாழ்வில் நெறிமுறைகளை, பண்பு, நீர் மேலாண்மை, நீதி, கற்-றலின் சிறப்பு, ஆட்சியின் மேண்மை, வரி மேலாண்மை, முறை-யான வாழ்க்கை, கொடுங்கோல் தவிர்த்தல் என அனைத்தையும் விளக்கியது. அத்துடன் பக்தி மார்க்கமும் சேர்ந்ததால், 'இறைவனடி சேர்-வதே மனிதனின் மிகப்பெரிய பேறாக' கருதினான். அதன்பின் மொகலாயர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என ஆட்சிகள் மாறியதும், காட்சிகளும் மாறின. தமிழர்கள் உலகெங்-கிலும் வியாபித்தாலும், மாண்பை இழந்தனர்.இவற்றை எல்லாம் நாம் உணரத்துவங்கிய போது, வள்ள-லாரும், பாரதியும் நம்மை மீளுருவாக்கம் கண்டனர். நாம் எங்கு செல்ல வேண்டும் என்ற திசைகாட்டினர். ஆனாலும் இன்று அர-சியல், சினிமா என, 2 மட்டுமே பிரதானம் என ஆட்கொண்-டுள்ளோம். நம் அனைவருக்கும் வேற்றுமை இல்லா பெருஞ்-சொத்து தமிழே என உணர்ந்து, அதில் கூறுவனவற்றை உணர்ந்து உயர்வோம்.இவ்வாறு பேசினார்.