மேலும் செய்திகள்
சிவன்மலை கோவிலில் சூரசம்ஹாரம்
2 hour(s) ago
அமராவதி புதைகுழி; நிரந்தர தீர்வுக்கு மனு
2 hour(s) ago
டாஸ்மாக் கடைக்கு ஈரோட்டில் எதிர்ப்பு
2 hour(s) ago
ஊழல் ஒழிப்பு உறுதிமொழி
2 hour(s) ago
கிணற்றில் பெண் சடலம்
2 hour(s) ago
ஈரோடு, அந்தியூரில் நள்ளிரவில் பணம், பிராந்தி பாட்டில், 303 நோட்டீஸ், வாக்காளர் பட்டியலுடன் சென்ற தி.மு.க.,வை சேர்ந்த இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர், பர்கூர் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் வனப்பிரிவில் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:15 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஹீரோ ஹோண்டா பைக்கில் வந்த இரு வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம், 88,500 ரூபாய், வி.எஸ்.ஓ.பி., பிராந்தி முழு பாட்டில், திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் பெயர், கதிர் அரிவாள் சின்னம் அச்சிடப்பட்ட, 303 நோட்டீஸ், வாட்டர் பாட்டிலில் 1 லிட்டர் பெட்ரோல், பர்கூர் ஊராட்சியின் போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் புத்தகம் ஒன்று இருந்தது.இவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அந்தியூர் போலீசில் புகார் செய்தனர். பைக் கில் வந்த அந்தியூர் தாமரைக்கரை மூர்த்தி, 32, ஒந்தனை முருகேஷ், 29, ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவரும் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எடுத்து செல்லப்பட்டதா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago