கோவை,:நீர்வரத்து அதிகரித்ததால், கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்-படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழி-யாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இத்தடுப்பணையின் பாறைகளில் இருந்து, அருவி போல் தண்ணீர் கொட்டுவதால், அதில் குளிப்பதற்கும், அருவியின் அழகை ரசிப்பதற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான சத்தியமங்கலம், பவானிசாகர், கொடிவேரி உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்ததால், கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.இதனால், தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து சென்றது. தடுப்பணையில் பாதுகாப்பு கம்பியை தாண்டி, தண்ணீர் வெளியேறுகிறது.இதன் காரணமாக கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிறு என்பதால், கொடிவேரி அணையில் குளிக்க அதிக மக்கள் திரண்டனர். ஆனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், ஏமாற்றமடைந்தனர்.கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை, அணையின் முன்பு உள்ள பாலத்தின் மீது நின்று பார்த்து செல்கின்றனர். மழை குறைந்து நீர்வ-ரத்து, 500 கன அடியாக குறைந்தால் மட்டுமே, தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என, நீர்வள ஆதாரத்து-றையினர் தெரிவித்தனர்.