உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்ட பணியாளர்களாக சேவை புரிய அழைப்பு

சட்ட பணியாளர்களாக சேவை புரிய அழைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வ சட்டப்பணியாளர்களாக சேவை புரிய விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பவானி, பெருந்துறை, கோபி, சத்தி, அந்தியூர், கொடுமுடி ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவுக்கு சட்ட தன்னார்வலர், 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர், அரசு ஊழியர்கள், சமூக சேவையாற்றும் மாணவர், ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர், டாக்டர், சட்டம் கல்லுாரி மாணவர்கள், அரசியல் சாராத சேவை சார்ந்த தொண்டு நிறுவனங்கள், சங்கங்களின் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம். வரும், 13ம் தேதி மாலை 5:00 மணிக்குள், ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்க வேண்டும்.விண்ணப்பத்தை http://erode.dcourts.gov.inஎன்ற மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது நிரந்தர பணி கிடையாது. அடிப்படை சம்பளம் கிடையாது. சேவைக்கு தகுந்த கவுரவ ஊதியம் அளிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை